Registered Section 8 Non-Profit · NGO Darpanபதிவுசெய்யப்பட்ட Section 8 இலாபநோக்கற்ற நிறுவனம் · NGO Darpan
2000–202626 Years of Public Service Journey26 ஆண்டுகால மக்கள் சேவைப் பயணம்

Guardian of Nature,
Protector of the Poor
இயற்கையின் பாதுகாவலர்,
ஏழைகளின் காவலர்

இயற்கையின் பாதுகாவலர் – ஏழைகளின் காவலர்

Guardian of Nature – Protector of the Poor

A not-for-profit Section 8 organisation committed to sustainable development, public participation, community empowerment and decentralised action across Tamil Nadu. நிலையான வளர்ச்சி, மக்கள் பங்கேற்பு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இலாபநோக்கற்ற Section 8 நிறுவனம்.

SPED Foundation emblem
26Years of
Service
ஆண்டுகால
சேவை
26
Years of Serviceஆண்டுகால சேவை
12
Focus Areasசெயல்பாட்டுத் துறைகள்
8
Priority Programmesமுன்னுரிமைத் திட்டங்கள்
4
Flood Relief Effortsவெள்ள நிவாரணப் பணிகள்
About the Foundationநிறுவன அறிமுகம்

Working for inclusive & lasting social progressஒருங்கிணைந்த சமூக நலப் பணிகள்

SPED Foundation is a not-for-profit Section 8 organisation committed to sustainable development, public participation, community empowerment and decentralised action.

SPED Foundation என்பது நிலையான வளர்ச்சி, மக்கள் பங்கேற்பு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இலாபநோக்கற்ற Section 8 நிறுவனம்.

From protecting natural resources to improving education, healthcare, livelihoods, rights and dignity for poor, vulnerable and marginalised communities, the Foundation works towards inclusive and lasting social progress. Our public-service journey began through community initiatives and volunteer efforts in 2000, and SPED Foundation was formally incorporated as a Section 8 company in 2024.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது முதல் ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், உரிமைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை மேம்படுத்துவது வரை ஒருங்கிணைந்த சமூக நலப் பணிகளை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம். 2000-ஆம் ஆண்டு தொடங்கிய தன்னார்வச் சேவை முயற்சிகளின் தொடர்ச்சியாக, 2024-ஆம் ஆண்டு SPED Foundation Section 8 நிறுவனமாக முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

Our Vision & Missionபார்வை & பணி
26

Years of serving people & natureஆண்டுகால மக்கள் மற்றும் இயற்கைச் சேவை

  • 2000Community & volunteer service beginsசமூக, தன்னார்வச் சேவை தொடக்கம்
  • 2015Flood relief — also 2017, 2023 & 2024வெள்ள நிவாரணம் — 2017, 2023, 2024-லும்
  • 2024Incorporated as a Section 8 companySection 8 நிறுவனமாகப் பதிவு
  • 2025Registered on NGO DarpanNGO Darpan பதிவு
Govt. Registeredஅரசுப் பதிவுCIN · Sec 8 · NGO Darpan
Our Nameஎங்கள் பெயர்

What SPED Stands ForSPED – எங்கள் பெயரின் பொருள்

S
S

Sustainability

நிலைத்தன்மை

Protect natural resources and promote development that benefits present and future generations.இயற்கை வளங்களைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் நீடித்த வளர்ச்சியை உருவாக்குதல்.

P
P

Participation

பங்கேற்பு

Enable people — especially women, young people, local bodies and under-represented communities — to take part in planning and implementation.மக்கள், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் பங்கேற்க வாய்ப்பளித்தல்.

E
E

Empowerment

அதிகாரமளித்தல்

Help people progress with confidence through education, skills, information, livelihood opportunities and awareness of their rights.கல்வி, திறன், தகவல், வாழ்வாதார வாய்ப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மூலம் மக்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற உதவுதல்.

D
D

Decentralization

அதிகாரப் பரவலாக்கம்

Encourage locally appropriate solutions through community and local-government participation, accountability and transparency.உள்ளூர் தேவைகளுக்கேற்ற தீர்வுகளை மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் உருவாக்குதல்; பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட நிர்வாகத்தை ஊக்குவித்தல்.

Vision & Missionபார்வை & பணி

The world we are working towardsநாங்கள் உருவாக்க விரும்பும் உலகம்

Our Visionஎங்கள் பார்வை

To help build a pollution-free, compassionate, equitable and knowledge-rich world in harmony with nature — where every person can access quality education, healthcare, dignified livelihoods, safety and equal rights.

இயற்கையோடு இணைந்த, நஞ்சில்லா, சமத்துவமான, கல்வியறிவு மிக்க, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மனிதநேயம் நிறைந்த உலகை உருவாக்குதல்; ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, அடிப்படை மற்றும் மேம்பட்ட மருத்துவச் சேவைகள், கண்ணியமான வாழ்வாதாரம் மற்றும் சம உரிமைகள் கிடைக்கும் சமூகத்தை உருவாக்குதல்.

Our Missionஎங்கள் பணி

  • Extend education, healthcare, food, livelihood and emergency support to poor, vulnerable and unsupported people.ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கல்வி, மருத்துவம், உணவு, வாழ்வாதாரம் மற்றும் அவசரகால உதவிகளைச் சென்றடையச் செய்தல்.
  • Promote quality learning for all, without discrimination based on economic status, gender, language, social background or disability.பொருளாதார நிலை, பாலினம், மொழி, சமூகப் பின்னணி அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி வாய்ப்புகளை ஊக்குவித்தல்.
  • Build awareness, support systems and partnerships that improve access to affordable, quality healthcare.அனைவருக்கும் அணுகக்கூடிய, தரமான மற்றும் மலிவான மருத்துவச் சேவைகள் கிடைக்க விழிப்புணர்வு, ஆதரவு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல்.
  • Protect forests, trees, lakes, rivers, wetlands, soil, air, water resources and biodiversity.காடுகள், மரங்கள், நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், மண், காற்று மற்றும் உயிரினப் பன்மையைப் பாதுகாத்தல்.
  • Advance the welfare and protection of animals, birds and other living beings.விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னெடுத்தல்.
  • Share knowledge of Tamil language, literature, ancient civilisation, traditional knowledge, science, mathematics, astronomy and discoveries.தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், பழமையான நாகரிகம், பாரம்பரிய அறிவு, அறிவியல், கணிதம், வானியல் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
  • Promote the safety, rights and development of women, children, older persons, young people and persons with disabilities.பெண்கள், குழந்தைகள், முதியோர், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்காகச் செயல்படுதல்.
  • Raise awareness of the harms of alcohol and substance misuse and encourage a healthy, substance-free society.மது மற்றும் போதைப்பொருள் பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியமான போதையற்ற சமூகத்தை ஊக்குவித்தல்.
  • Raise concerns about corruption, exploitation, discrimination and public-interest violations through lawful, peaceful and responsible means.ஊழல், சுரண்டல், பாகுபாடு மற்றும் பொதுநலத்திற்கு எதிரான தவறுகளை சட்டபூர்வமான, அமைதியான மற்றும் பொறுப்பான வழிகளில் சுட்டிக்காட்டுதல்.
  • Strengthen disaster preparedness, relief, rescue, rehabilitation and community resilience.பேரிடர் காலங்களில் நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத் தயார்நிலையை மேம்படுத்துதல்.
  • Build public participation, volunteerism, social solidarity and accountable local governance.மக்கள் பங்கேற்பு, தன்னார்வத் தொண்டு, சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்பான உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துதல்.
Long-Term Aspirationsநீண்டகாலக் கனவுகள்

Dreams we are building towardsநாங்கள் காணும் எதிர்காலம்

Expand access to quality education regardless of a person's financial circumstances.பொருளாதாரத் தடைகள் இல்லாமல் அனைவரும் தரமான கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்குதல்.

Develop, support or partner in hospitals and healthcare facilities accessible to poor and underserved communities.ஏழை மற்றும் பின்தங்கிய மக்களும் தரமான மருத்துவச் சேவையைப் பெறக்கூடிய மருத்துவமனைகளைக் கூட்டாண்மைகள் மூலம் உருவாக்குதல் அல்லது ஆதரித்தல்.

Establish green learning campuses, skills centres and research initiatives rooted in sustainability.இயற்கை வளங்களுடன் இணைந்த பசுமைக் கல்வி வளாகங்கள், திறன் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குதல்.

Build community movements to protect water bodies, forests and biodiversity.நீர்நிலைகள், காடுகள் மற்றும் உயிரினப் பன்மையைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கங்களை உருவாக்குதல்.

Create platforms that connect Tamil heritage, global knowledge, science and modern technology.தமிழ் மரபு, உலக அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் அறிவுப் பரவல் தளங்களை உருவாக்குதல்.

Contribute to a safer, healthier and more compassionate society with reduced harm from alcohol and substance misuse.மது மற்றும் போதைப்பொருள் பாதிப்புகள் குறைந்த, பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் அன்பான சமூகத்தை உருவாக்கப் பங்களித்தல்.

Core Valuesஅடிப்படை மதிப்புகள்

Principles that guide usஎங்களை வழிநடத்தும் கொள்கைகள்

Humanity & dignityமனிதநேயம் மற்றும் கண்ணியம்
Responsibility towards natureஇயற்கை மீதான பொறுப்பு
Integrity & honestyஉண்மை மற்றும் நேர்மை
Equality & non-discriminationசமத்துவம் மற்றும் பாகுபாடின்மை
Transparency & accountabilityவெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு
Compassion & non-violenceஅன்பு, கருணை மற்றும் அகிம்சை
Scientific temper & critical thinkingஅறிவியல் மனப்பான்மை மற்றும் பகுத்தறிவு
Respect for Tamil heritageதமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மரபுக்கு மரியாதை
Public participationமக்கள் பங்கேற்பு
Rule of lawசட்டத்தின் ஆட்சி
Responsibility to future generationsதலைமுறைகளுக்கிடையிலான பொறுப்பு
Together for dignityகண்ணியத்திற்காக ஒன்றாக
What We Doநாங்கள் செய்வது

Our Key Focus Areasமுக்கிய செயல்பாட்டுத் துறைகள்

01
Environment & Climateசுற்றுச்சூழல் மற்றும் காலநிலை

Tree planting, green forests and community woodlots, plastic reduction, waste segregation, recycling, pollution prevention and environmental awareness.மரம் நடுதல், பசுமைக் காடுகள் மற்றும் சமூக வனங்கள், பிளாஸ்டிக் குறைப்பு, கழிவு பிரித்தல், மறுசுழற்சி, மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.

02
Water Bodies & Water Securityநீர்நிலைகள் மற்றும் நீர் பாதுகாப்பு

Restoration of lakes, ponds, canals and catchment areas; rainwater harvesting, groundwater recharge and water conservation.ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளைச் சீரமைத்தல்; மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் நீர் சிக்கனம்.

03
Education & Knowledge Accessகல்வி மற்றும் அறிவுப் பரவல்

School support, educational assistance, libraries, digital learning, skills training, science exhibitions and lifelong learning.பள்ளி ஆதரவு, கல்வி உதவிகள், நூலகங்கள், டிஜிட்டல் கல்வி, திறன் பயிற்சி, அறிவியல் கண்காட்சிகள் மற்றும் வாழ்நாள் கற்றல்.

04
Tamil Heritage, History & Scienceதமிழ் மரபு, வரலாறு மற்றும் அறிவியல்

Evidence-based learning on Tamil grammar, literature, archaeology and civilisation, traditional knowledge, mathematics, geography and astronomy.தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல், நாகரிக வரலாறு, பாரம்பரிய அறிவு, கணிதம், புவியியல், வானியல் ஆகியவற்றை ஆதாரபூர்வமாகக் கொண்டு சேர்த்தல்.

05
Health & Medical Supportசுகாதாரம் மற்றும் மருத்துவ உதவி

Health camps, awareness, prevention, mental-health literacy, emergency assistance and improved access to medical services.மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு, நோய்த்தடுப்பு, மனநல விழிப்புணர்வு, அவசர மருத்துவ உதவி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான அணுகல்.

06
Women & Child Safetyபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு

Rights awareness, safer public spaces, education, skills, child protection and referral to appropriate support services.உரிமை விழிப்புணர்வு, பாதுகாப்பான பொது இடங்கள், கல்வி, திறன் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தேவையான சேவைகளுடன் இணைத்தல்.

07
Poverty Alleviation & Welfareஏழைகள் மற்றும் சமூக நலன்

Food, clothing, educational aid, older-person support, assistance to vulnerable people, disability inclusion and livelihood development.உணவு, உடை, கல்வி உதவி, முதியோர் ஆதரவு, ஆதரவற்றோர் உதவி, மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு.

08
Animal & Bird Welfareவிலங்குகள் மற்றும் பறவைகள் நலன்

First-aid and rescue support, water and food initiatives, habitat protection, bird conservation and responsible coexistence.முதலுதவி மற்றும் மீட்பு உதவி, தண்ணீர் மற்றும் உணவு ஏற்பாடுகள், வாழிடப் பாதுகாப்பு, பறவைகள் பாதுகாப்பு மற்றும் இணை வாழ்வு.

09
Youth & Volunteer Developmentஇளைஞர் மற்றும் தன்னார்வலர் மேம்பாடு

Leadership, civic responsibility, skills, career guidance and volunteer networks.தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் தன்னார்வ வலையமைப்பு.

10
Human Rights & Good Governanceமனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி

Rights awareness, helping communities raise grievances with competent authorities, social accountability and lawful public-interest advocacy.உரிமைகள் விழிப்புணர்வு, பொதுமக்கள் குறைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லுதல், சமூகக் கண்காணிப்பு மற்றும் சட்டபூர்வமான பொதுநல வாதம்.

11
Disaster Managementபேரிடர் மேலாண்மை

Relief, rescue, rehabilitation and preparedness for floods, storms, droughts and other emergencies.வெள்ளம், புயல், வறட்சி மற்றும் பிற அவசரநிலைகளில் நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு மற்றும் முன்தயாரிப்பு.

12
Rural Development & Livelihoodsகிராமப்புற வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம்

Agriculture, natural-resource management, skills, micro-enterprise and community-led development.விவசாயம், இயற்கை வள மேலாண்மை, திறன் வளர்ப்பு, சிறு தொழில் முயற்சி மற்றும் சமூக அடிப்படையிலான வளர்ச்சி.

Priority Programmesமுன்னுரிமைத் திட்டங்கள்

Programmes making a real differenceமாற்றத்தை உருவாக்கும் திட்டங்கள்

Focused, community-led initiatives with clear objectives and measurable indicators.தெளிவான இலக்குகள் மற்றும் அளவீடுகளுடன் கூடிய மக்கள் பங்கேற்புத் திட்டங்கள்.

01
Green Communitiesபசுமை ஊர்

Planting trees and native species, creating green spaces and community forests.மரங்கள், உள்ளூர் தாவரங்கள், பசுமைப் பகுதிகள் மற்றும் சமூக வனங்களை உருவாக்குதல்.

02
Waterbody Restorationநீர்நிலை மீட்பு

Lakes, ponds, canals, rainwater harvesting and groundwater recharge.ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல்.

03
Clean Communitiesதூய்மை & கழிவு மேலாண்மை

Source segregation, reducing single-use plastics, recycling and environmental education.மூலத்திலேயே கழிவு பிரித்தல், பிளாஸ்டிக் குறைப்பு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி.

04
Education Supportகல்வி ஆதரவு

Learning guidance, resources and skills development for students from disadvantaged backgrounds.பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல், கற்றல் வளங்கள் மற்றும் திறன் பயிற்சி.

05
Healthcare Accessசுகாதார அணுகல்

Health camps, awareness and referrals to appropriate medical services.மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் உரிய மருத்துவச் சேவைகளுடன் இணைத்தல்.

06
Biodiversity & Animal Welfareஉயிரினப் பாதுகாப்பு

Community action to protect birds, animals and their habitats.பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கும் சமூக முயற்சிகள்.

07
Disaster Volunteer Networkபேரிடர் தன்னார்வ வலையமைப்பு

Preparedness, safety practices, relief coordination and rehabilitation support.பயிற்சி, பாதுகாப்பு நடைமுறைகள், நிவாரண ஒருங்கிணைப்பு மற்றும் மறுவாழ்வு ஆதரவு.

08
Tamil Knowledge & Scienceதமிழ் அறிவு & அறிவியல் பரவல்

Talks, exhibitions, reading circles, student activities and public learning.உரைகள், கண்காட்சிகள், வாசிப்பு வட்டங்கள், மாணவர் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கல்வி.

Track Recordஎங்கள் அனுபவம்

Community Service Experienceகடந்தகால சேவை அனுபவங்கள்

Grassroots initiatives across waste, water, trees and care for people and animals form an important part of our service journey.கழிவு மேலாண்மை, நீர், மரம் நடுதல், மக்கள் மற்றும் விலங்குகள் நலன் ஆகியவை எங்கள் சேவைப் பயணத்தின் முக்கிய அனுபவங்களாகும்.

Flood Relief & Volunteer Supportவெள்ள நிவாரணம் & தன்னார்வ ஆதரவு
2015201720232024
Plastic-waste awarenessபிளாஸ்டிக் கழிவு விழிப்புணர்வு Wet & dry waste segregationஈர–உலர் கழிவு பிரித்தல் Plastic collection & reuseபிளாஸ்டிக் சேகரிப்பு & மறுபயன்பாடு Public waste binsதெரு குப்பைத்தொட்டிகள் Water-conservation awarenessநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு Tree plantingமரம் நடுதல் Support for older personsமுதியோர் உதவி Help for vulnerable peopleஆதரவற்றோருக்கு உதவி First aid for animalsவிலங்குகளுக்கான முதலுதவி Blood-donation campsஇரத்ததான முகாம்கள் Flood relief volunteeringவெள்ள நிவாரணத் தன்னார்வப் பணி
How We Workசெயல்பாட்டு அணுகுமுறை

Listening first, acting togetherகேட்டறிந்து, இணைந்து செயல்படுவோம்

We collaborate with schools, colleges, healthcare institutions, government bodies, local authorities, businesses and civil-society organisations.பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.

1
Listen to communitiesதேவைகளைக் கேட்டறிதல்
2
Plan with residentsமக்களுடன் திட்டமிடுதல்
3
Build partnershipsகூட்டாண்மை உருவாக்குதல்
4
Guide volunteers safelyதன்னார்வலர் வழிகாட்டுதல்
5
Document & review openlyபதிவு செய்து மதிப்பீடு
Trust & Transparencyநம்பகத்தன்மை

Accountability & Safeguardingபொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்பு

Purpose-led fundsநோக்கத்திற்கேற்ற நிதி

Proper accounts and statutory reporting.உரிய கணக்குப் பதிவுகள் மற்றும் சட்டப்பூர்வ அறிக்கைகள்.

Dignity & privacyகண்ணியம் & தனியுரிமை

Respect for every beneficiary's dignity and privacy.பயனாளிகளின் கண்ணியம் மற்றும் தனியுரிமை.

Safeguardingபாதுகாப்பு நடைமுறைகள்

Protection of children and vulnerable persons; no harassment or discrimination.குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோருக்கான பாதுகாப்பு; தொல்லை, பாகுபாடு தடுப்பு.

Grievance channelsபுகார் வழிமுறைகள்

Accessible complaints and conflict-of-interest disclosure.புகார் வழிமுறைகள் மற்றும் நலன் முரண்பாடு வெளிப்படுத்தல்.

Measurable indicatorsஅளவிடக்கூடிய இலக்குகள்

People reached, trees maintained, waterbodies restored, volunteers trained.பயனடைந்தோர், பராமரிக்கப்படும் மரங்கள், மீட்கப்பட்ட நீர்நிலைகள்.

Verified reporting onlyஉறுதிப்படுத்தப்பட்ட தகவல்

Unverified figures or achievements will not be published.உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கைகள் வெளியிடப்படமாட்டாது.

Leadershipதலைமைத்துவம்

Leadership & Organisationதலைமைத்துவம் மற்றும் அமைப்பு

Our work is carried forward by the governing team, programme leads, volunteers and community partners.நிர்வாகக் குழு, திட்டப் பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகக் கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

MV
Mr. M. Vijayakumarதிரு. M. விஜயகுமார்
Founder & Chairmanநிறுவனர் மற்றும் தலைவர்
MJ
Mr. M. Jeevanandhanதிரு. M. ஜீவானந்தன்
Vice Chairmanதுணைத் தலைவர்
RS
Mr. R. Sivakumarதிரு. R. சிவகுமார்
Project Headதிட்டத் தலைவர்
TK
Mr. Tahavar Khanதிரு. தஹாவர் கான்
Secretaryசெயலாளர்
Our Commitmentஎங்கள் உறுதிமொழி

Our Promise to Societyசமூகத்திற்கான எங்கள் உறுதிமொழி

We will protect nature and respect every form of life. We will stand with people in need and work to widen access to education and healthcare. We will promote the safety of women, children and vulnerable people. We will share the knowledge heritage of Tamil and the advances of world science. We will challenge injustice peacefully and lawfully, and work together for a society where every human being is treated with dignity.

இயற்கையைப் பாதுகாப்போம். உயிர்களை மதிப்போம். ஏழைகளுக்கு துணை நிற்போம். அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்கப் பாடுபடுவோம். பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயல்வோம். தமிழின் அறிவுச் செல்வத்தையும் உலகின் அறிவியல் முன்னேற்றங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அநீதியை அமைதியாகவும் சட்டபூர்வமாகவும் எதிர்த்து, மனிதனை மனிதன் மதிக்கும் சமத்துவமான சமூகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.

“இயற்கையைப் பாதுகாப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம் – அறிவைப் பகிர்வோம்.”
Protect nature · Nurture humanity · Share knowledge
Invitation to Partnerஇணைந்து செயல்பட அழைப்பு

Together, let us build programmes that matterஇணைந்து பொதுநலத் திட்டங்களை முன்னெடுப்போம்

Educational institutions, government and local bodies, hospitals, research organisations, businesses, CSR partners, civil-society organisations, donors and volunteers are warmly invited to collaborate with SPED Foundation.

கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், CSR அமைப்புகள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் SPED Foundation உடன் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

Schools & Collegesபள்ளிகள் & கல்லூரிகள் Government & Local Bodiesஅரசு & உள்ளாட்சி Hospitalsமருத்துவமனைகள் CSR NGOsதன்னார்வ அமைப்புகள் Donors & Volunteersநன்கொடையாளர்கள் & தன்னார்வலர்கள்
Contactதொடர்பு

Get in Touchஎங்களைத் தொடர்பு கொள்ள

Contact Informationதொடர்பு விவரங்கள்

Officeஅலுவலக முகவரி 5/118, Manimegalai Street, Sathiya Nagar, SIPCOT, Ranipet – 632403, Tamil Nadu, India 5/118, மணிமேகலை தெரு, சத்தியா நகர், SIPCOT, ராணிப்பேட்டை – 632403, தமிழ்நாடு
Phoneதொலைபேசி +91 97910 31152
+91 90036 03219
Emailமின்னஞ்சல் sped24foundation@gmail.com

Send us a messageசெய்தி அனுப்புங்கள்

Please enter your name.உங்கள் பெயரை உள்ளிடவும்.
Please enter a valid phone number.சரியான தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
Please write a message.செய்தியை உள்ளிடவும்.